Monday, August 12, 2013

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்   பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். பீர்க்கங்காயை முற்றிய பிறகு தான் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன. 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன. 
www.panadoldoctors.blogspot.com

No comments:

Post a Comment